கொரோனா தடுப்பூசியால் ஒரே இரவில் கோடீஸ்வரி ஆன பெண்மணி!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆஸ்திரேலியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பெண்மணி ஒருவர் 7.4 கோடி ரூபாய் லாட்டரியை வென்றுள்ளார். இந்தத் தகவலையடுத்து இப்படி ஒரு அதிர்ஷ்டமா? என்று அந்த பெண்மணியை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் “தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ்“ என்ற பெயரில் லாட்டரி பரிசுப்போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இதையடுத்து பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் லாட்டரி பரிசுப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 25 வயதான ஜோயன் ஸு என்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய மதிப்பில் 7.4 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கோடீஸ்வரியாகி இருக்கும் ஜோயனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.