புத்திசாலித்தனத்தால் திருடனை விரட்டி அடித்த இளம் பெண்..! வீடியோ.

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது புத்தி சாதுரியத்தால் திருடனை விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா தென் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் அடிக்கடி திருட்டு போய்க்கொண்டிருந்து வந்திருக்கிறது. குடியிருப்புவாசிகள் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், சிசிடிவி காமிராக்கள் போன்றவை பொருத்தி பார்த்தும் திருட்டை குறைக்க முடியவில்லை.

இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கேட்டி கேமரேனா என்ற பெண்மணி இந்த திருட்டு சம்பவங்களிலிருந்து தன்னுடைய வாகனத்தை காத்துக்கொள்ள motion activated sprinkler என்ற ஒரு கருவியை தனது காரில் பொருத்தி வைத்திருக்கிறார். இது எப்படி செயல்படுமென்றால் வாகனம் லாக் செய்யப்பட்ட பிறகு சவுண்ட் சென்சார் இருந்தால் தொட்டவுடன் அலாரம் அடிக்கும் அல்லவா.. அதேபோல் இது வாகனத்தில் பெரிய அளவு அசைவுகள் இருந்தால் அசைவு இருக்கும் இடத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.

இந்த motion activated sprinkler வாகனத்தில் பொறுத்தப்பட்டிருப்பதை அறியாத திருடன் வழக்கம்போல் திருடுவதற்காக கேட்டி கேமரேனாவின் காரின் அருகே வந்துள்ளான். வாகனத்தை திறக்க முற்பட்டவுடன் சென்சார் ஆக்ட்டிவேட்டாகி திருடன் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அவனை துரத்திவிட்டது.தனது சிசிடிவியில் பதிவான இந்த வீடியோவை கேட்டி தனது முகநூலை பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

More News

இந்தியாவில் கொரோனா வைரஸ்.. நொய்டாவில் இரண்டு பள்ளிகள் மூடல்..!

டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் குழந்தை நொய்டாவில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில் படித்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய இளைஞர்! அதிர்ச்சி வீடியோ

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.

மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் படத்தை பார்த்த திமுக தலைவர்!

ஜீவா நடிப்பில் பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜிப்ஸி. மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் சென்சாரில் சிக்கி, அதன்

3 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? கமல்ஹாசன் பேட்டி

சமீபத்தில் நடந்த 'இந்தியன் 2' விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில்

சுழன்று ஆடிய சூறாவளி; இணையத்தில் வைரலான ராஷ்மிகாவின் Back flip

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல்