close
Choose your channels

பால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி

Friday, July 19, 2019 • தமிழ் Comments

ரஷ்ய நாட்டிலுள்ள ஒரு அப்பார்ட்மெண்டின் 9வது மாடியில் ஒரு பெண்ணும் ஒரு சில ஆண்களும்  பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். அந்த பார்ட்டியில் மது பரிமாறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒரு ஆண், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு அந்த பெண்ணும் ஆணும் பால்கனி அருகே பாலுறவில் ஈடுபட்டு வந்த போது எதிர்பாராதவிதமாக ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மீது விழுந்ததால் ஆண் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். இருவரும் நிர்வாண நிலையில் கீழே விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட மேலும் சில ஆண்களிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz