close
Choose your channels

ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்: என்ன செய்தார்கள் மற்ற பயணிகள்?

Friday, June 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையிலும் இன்னும் ஓடும் பேருந்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகளுடன் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரை அந்த பேருந்தின் டிரைவரே பாலியல் பலாத்காரம் செய்ததும் அதற்கு உடந்தையாக பேருந்தின் கண்டக்டரும் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் கணவரை பார்ப்பதற்காக தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். லாக்டவுன் காரணமாக தனது தாயார் வீட்டில் இருந்த அவர் தற்போது பேருந்துகள் ஓட தொடங்கியதை அடுத்து குழந்தைகளுடன் அவர் பயணம் செய்தார். பேருந்தின் கடைசி சீட்டில் அவர் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் இரவு நேரம் என்பதால் அனைத்து பயணிகளும் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அந்த பேருந்தின் 2 டிரைவர்களில் ஒருவர் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் இன்னொரு டிரைவர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கு அந்த பேருந்தின் கண்டக்டரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த பெண்ணை டிரைவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து பேருந்து தனது சொந்த ஊருக்கு வந்தவுடன் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இன்னொரு பேருந்து டிரைவரும் கண்டக்டரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பேருந்து முழுவதும் பயணிகள் இருக்கும் போது டிரைவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் இந்த பலாத்காரத்தை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் அறியாமல் தூங்கி கொண்டிருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.