நிஜமாவே பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருப்பாங்களோ??? பழமொழியை நிரூபிக்கும் புது கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

 

வீரம் என்ற வார்த்தைக்கு பெரும்பாலும் ஆண்களையே கைக் காட்டுகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்த கணிப்பு தவறு எனப்பல நேரங்களில் சொல்லப்பட்டாலும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைக்கு நம்மால் நேரடியாகப் பதில் கொடுக்க முடிவதில்லை. காரணம் உடல் அளவில் இருக்கும் பலவீனம் இன்றைக்கும் பெண்களை இரண்டாம்தர மனிதர்களாகவே வைத்திருக்கிறது.

ஆனால் பழங்காலத்துப் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களே இல்லை என வரலாறு அடிக்கடி எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் எல்லாம் அந்த காலத்தில் முறத்தைக் கொண்டே புலியை விரட்டினார்கள் என்றொரு பழமொழி நம்ம ஊரில் கூட உண்டு. அந்த வகையில் 9,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேட்டையில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கும் ஏராளமான சான்று தற்போது நடத்தப்பட் ஒரு ஆய்வில் கிடைத்து இருககிறது.

பெருநாட்டின் ப்ளீஸ்டோசீன், ஹோலோசீனில் போன்ற இடங்களில் மானுடவியலாளர்கள் நடத்திய சில ஆய்வுகளில் பெண்கள் பழங்காலத்துக்கு முன்பே நேரடியாக வேட்டைச் செயலில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரம் கிடைத்து இருக்கிறது. அதில் முதலில் 17-19 வயது பெண்ணின் எலம்புக் கூடு ஒன்று கிடைத்து உள்ளது. அந்த எலும்புக் கூட்டை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அப்பெண் இறைச்சி சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்திருப்பார் எனக் கூறியதோடு அதன் காலம் கிட்டத்தட்ட 9 ஆயிரம் வருடங்களை முன்னோக்கி செல்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் எலும்புக் கூட்டுடன் வேட்டையாடுவதற்குத் தேவையான எரிபொருள், கத்தி, விலங்குகளை அறுப்பதற்குத் தேவையான கம்பி போன்ற கருவிகள் கிடைத்து இருக்கிறது. இதனால் அருகில் உள்ள சில பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்த மானுடவியலாளர்கள் அப்பகுதியை ஒட்டி தற்போது 107 இடங்களில் 427 புதைகுழிகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

அந்த புதைகுழிகளில் இதுவரை 27 பழங்கால எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புக் கூட்டில் 11 பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த எலும்புக் கூடுகளும் வேட்டையில் ஈடுபட்டதற்கான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் 9,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நேரடியாக வேட்டையில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரம் கிடைத்து இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.