தங்கச் சங்கிலி வழங்கிய இளம் பெண்ணுக்கு பணி ஆணை… நேரில் வழங்கிய அமைச்சர்!

முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை வழங்கிய இளம்பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, அதற்கான பணி ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கியுள்ளார்.

மேட்டூர் அணை திறப்புக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் வந்து இருந்தார். அப்போது பி.இ படித்த இளம்பெண் சௌமியா தனக்கு வேலை வேண்டும் என்ற கோரிக்கையோடு 2 பவுன் தங்கச் சங்கிலியையும் முதலமச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கி இருந்தார். இதைப் பார்த்து வியந்து போன முதல்வர் வறுமையிலும் பொதுநலன் கருதிய பொன் மகளுக்கு உறுதியாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வகையில் சௌமியாவிற்கு தற்போது மேட்டூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத்தந்து, அதற்கான பணி ஆணையை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கியுள்ளார். மேலும் சௌமியாவிற்கு முதல்வர் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள சௌமியா முதல்வரின் நம்பிகையைக் காப்பாற்றுவேன். எனக்கு கிடைத்த சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வேண்டும் எனவும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

More News

'பாபநாசம் 2' படத்தில் கெளதமிக்கு பதில் இந்த நடிகையா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கமல்ஹாசன்,

தடைகளை தகர்த்தது சிம்பு படம்: நீதிமன்ற ஆணையால் விரைவில் ரிலீஸ் தேதி!

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்

கும்பமேளாவில் குளறுபடி… 1 லட்சம் போலி கொரோனா முடிவுகள் வெளியானதாகப் பகீர் தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆண்டுதோறும் 3 மாதம் கொண்டாடப்படும்

லண்டனில் திடீரென காணாமல் போன 'ஜகமே தந்திரம்' நடிகர்: படப்பிடிப்பின்போது நடந்த பதட்டம்!

தனுஷ் நடித்த ;ஜகமே தந்திரம்; திரைப்படம் வரும் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பூக்காரிக்கு பொருள் கொடுத்தேன்...! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர்...!

இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினக்கூலிகள் பலரும் பொருளாதார ரீதியாக ஏராளமான துன்பவங்களை அனுபவித்து வருகிறார்கள்