விஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை!

  • IndiaGlitz, [Sunday,November 17 2019]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா மற்றும் தொலைக்காட்சி நடிகை பிரகிதா ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தொலைக்காட்சி நடிகையான சௌந்தர்யா நந்தகுமார் இணைந்துள்ளார்.

இவர் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியவர்களின் படத்தில் இணைவது வேற லெவல் அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்

விக்னேஷ் கார்த்திக் இயக்கி வரும் ஒரு தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தன்னுடைய நடிப்பை பார்த்து லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்ததாகவும், அவருடைய அழைப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், ’தளபதி 64’படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்த தாகவும், ஆனால் தன்னுடைய கேரக்டர் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் இருந்து வரும் சௌந்தர்யா நந்தகுமார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ஒரு பாடலில் தோன்றியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு நடிப்பை விட இசையில் அதிக ஆர்வம் உண்டு என்றும் தனக்கு ஒரு பாடகியாக வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.