close
Choose your channels

கொரோனா அச்சம்!!! கைகுலுக்கலைத் தவிர்த்த உலகப் பிரபலங்கள்; சுவாரசியமான தருணங்கள்!!!

Saturday, March 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருவரின் கைகளை இன்னொருவர் இறுக்கமாகப் பிடித்து குலுக்கி தனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிப்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படும் ஒரு வழக்கம். இது நம்பிக்கை ஏற்படுத்தும் பழக்கமாக உலகம் முழுக்க வரவேற்கப் படுகிறது. தற்போது கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாகப் பலரும் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

உலகின் முக்கியப் பிரபலங்கள் இந்த மாதிரியான தருணங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறி பின்பு இந்திய வழக்கமான வணக்க முறையினையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான உலகத் தலைவர்கள் மற்றவர்களைப் பார்த்து கைக்குலுக்க வேண்டிய நேரத்தில் பெரிய சிரிப்பை மட்டுமே பதிலாக வழங்கி வருகின்றனர். காரணம் கைகளைப் பார்க்கும் போதே அவர்களது மனதில் கொரோனா பற்றிய நினைவுகள் தொற்றிக் கொள்கிறது.

இப்படி கைகுலுக்குவதைத் தவிர்த்த உலகத் தலைவர்களின் சில சுவாரசியமான தருணங்கள் இங்கே தொகுக்கப் பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின்போது கைகுலுக்குவதைத் தவிர்த்து இருக்கிறார். அதற்குப் பதிலாக அவர் செய்த காரியம் தற்போது அனைத்து இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அயர்லாந்து பிரதமரை வரவேற்ற அதிபர் ட்ரம்ப் தனது இரண்டு உள்ளங்கைகளையும் குவிப்பதற்கு முயற்சி செய்வது போல வணக்கத்தைத் தெரிவித்தார். மேலும், தனது வணக்க முறைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்து இருந்தார் என்பதே இங்கு முக்கியமானது.

"கை குலுக்காமல், என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைத்தேன். ஆனால் அண்மையில் இந்தியாவிற்கு சென்று வந்தபோது, அங்கு அனைவரும் தங்களது இருகைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக இருந்தது. எனவே அதை இப்போது பின்பற்றுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மார்ச் 2 ஆம் தேதி, ஜெர்மன் அதிபர் Angela Merkel பெர்லினில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்தார். அப்போது தனது உள்துறை அமைச்சருக்கு கைகுலுக்க முற்பட்டார். ஆனால் அமைச்சர் மிக எச்சரிக்கையாக கைகுலுக்க மறுத்தது அங்குள்ள பலராலும் வெகுவாக ரசிக்கப் பட்டது.

மார்ச் 10 ஆம் தேதி United kingdom க்கான இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் சரோஜா சிறிசேனா தனது கணவர் டாக்டர் சுதாத் தல்பேஹவாவுடன் இங்கிலாந்து ராணியை சந்தித்து இருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கைகுலுக்களை தவிர்த்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. எப்போதும் தன் கைகளில் கையுறைகளை போட்டுக் கொண்டு இருக்கும் ராணி, தற்போது கையுறைகள் அவசியமில்லை என்பதால் தனது கையுறைகளை தவிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2020 ஆம் ஆண்டிற்கான அறக்கட்டளை விருது விழாவின் போது மிக எச்சரிச்சையாக தனது கைகளை மற்றவர்களுடன் குலுக்காமல் தவிர்த்து இருக்கிறார். அவர் சந்தித்த அனைத்து பிரபலங்களையும் கைகூப்பி வரவேற்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது.

தற்போது, விளையாட்டு வீரர்கள் கைகளைக் குலுக்குவதற்கு பதிலாக தங்களது முஷ்டிகளை இடித்துக் கொள்ளும் Fist Bump முறையை பின்பற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீனாவில் யாரும் கைகளைக் குலுக்க வேண்டாம் என்று பல இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப் பட்டு இருக்கின்றன. ஜெர்மனியில் கைகுலுக்குவதற்கு மாற்றாக பின்பற்ற வேண்டிய பழக்கங்களை குறித்து விழிப்புணர்வும் செய்யப் பட்டு வருகிறது.

கைகுலுக்கும் வழக்கம் எப்போது ஆரம்பித்தது???

இந்தப் பழக்கம் சுமார் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இருந்தே இருப்பதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கைகுலுக்குவது போன்ற பழைய நூற்றாண்டின் சிலைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

முதலில் கைகளைக் குலுக்கும் பழக்கம் போர் வீரர்கள் மற்றும் மன்னர்களிடம் தான் ஆரம்பித்து இருக்கிறது. மன்னர்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது தங்களிடம் எந்த கருவியும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவே இப்படி கைகளை நீட்டிக் குலுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.