close
Choose your channels

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Monday, April 15, 2019 • தமிழ் Comments

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வரும்  மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் என 10 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில் உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கொல்டர்-நைல், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், நாதன் லியோன், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்த ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் தடைக்காலம் முடிந்ததால் இருவருக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz