'லால் சலாம்' படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் செய்த உலக கோப்பை வின்னர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணியில் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இருந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்த திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் உலக கோப்பையை இந்தியாவுக்காக முதலில் பெற்று தந்தவருமான கபில்தேவ் டப்பிங் பணியை செய்தார்.

இது குறித்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ’இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில்தேவ் அவர்கள் ’லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணியை முடித்தார். அவருடன் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம். நீங்கள் உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த கேப்டன்' என்று பதிவு செய்துள்ளார்.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கொஞ்சம் டைம் கொடுத்தா அவரை அடிச்சிடலாம்: தினேஷை கவிழ்க்க திட்டமிடும் போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் வெளியேற்ற தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பதும் வெளியில் இருந்து மூன்று எக்ஸ் போட்டியாளர்கள்

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் கொடுத்த வாக்குமூலம் இதுதான்..!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கமல்-ரஜினி.. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும்

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகிறதா? இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம்  நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

'ஏகே 63' படத்தை தயாரிக்க இருப்பது இந்த பிரபல நிறுவனமா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 63 வது படமான 'விடாமுயற்சி' படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி