உலகச் சுற்றுச் சூழல் தினம் இன்று...

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

தேவைமனிதனும் இயற்கை சூழலியலை சார்ந்து வாழும் ஒரு விலங்கினம். ஆனால் மனிதன் தனது களைப் பெருக்கிக் கொள்வதற்காக இயற்கைச் சூழலை பெரிய அளவிற்கு மாற்றி விடுகிறான். பின்னர் அதனால் ஏற்படும் கடும் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறான். புவி வெப்பமயமாதல், துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டி உறைதல் போன்ற அச்சுறுத்தல்கள் கடந்த பல வருடங்களாக இந்த பூமியில் இருந்து வருகிறது. தற்போது புதிதாக கொரோனா நோய்த்தொற்று, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, புதிய சூப்பர் புயல்கள் என அடுக்கடுக்கான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம். இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் சூழலியல் மேம்பாடு. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலை கொஞ்சமாவது நிலைத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற கட்டாயத்திற்கு தற்போது மனித இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. ஹ

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தும் விதமாக 1974 ஆம் ஆண்டில் இருந்து நாம் சுற்றுச் சூழல் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். பல்லுயிர் பெருக்க கருத்தாக்கத்தை இந்தாண்டு ஐ.நா. சபை வலியுறுத்தி இருக்கிறது. நாம் வாழக்கூடிய இக்கட்டான காலக் கட்டத்தில் பல்லுயிர் பெருக்கம் என்பது அத்யாவசியமான ஒன்று. உயிர் வாழ்க்கை என்பது அனைத்து உயிர்களையும் பாதுகாத்து இயற்கையை மேம்படுத்தி அதன் வழியிலான இருப்பை நிலை நிறுத்திக் கொள்வது. அனைத்து உயிர்களையும் அழித்து, காட்டைப் பெருக்கி, இயற்கையை மாசுபடுத்தினால் வருகிற விளைவு பெருந்தொற்றுகளாகவும், சூறாவளிகளாகவும்தான் இருக்கும். வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது, இயற்கை சூழலை மேம்படுத்துவது, பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பது, காட்டை வளர்ப்பது போன்ற செயல்பாடுகளில் இனிமேலாவது மனிதன் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்த தலைமுறை மனிதர்கள் நிம்மதியாக வாழமுடியும். சூழலை மேம்படுத்துவோம்... பல்லுயிர் காப்போம்...