விஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்!

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தில் தான் முதல்முறையாக முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்பது தெரிந்ததே. தேசிய விருது பெற்ற இந்த படத்தை அடுத்து அவர் ’தர்மதுரை’ ‘மாமனிதன்’ ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய திரைப்படங்களிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ’தர்மதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது தான் விஜய் சேதுபதிக்கு ’மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை இயக்குனர் சீனுராமசாமி கொடுத்தார் என்பதும் அந்தப் பட்டம் தான் இன்றுவரை விஜய்சேதுபதி படங்களின் டைட்டிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு புதிய பட்டத்தை இயக்குனர் சீனு ராமசாமி வழங்கியுள்ளார். அதுதான் ’வேர்ல்ட் பீப்பிள்ஸ் ஸ்டார்’. உலக மக்களின் ஸ்டார் என்ற பொருள்படும் இந்த பட்டம் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது

விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைஃப் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடிக்க இருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்து சீனுராமசாமி இந்த பட்டத்தை விஜய்சேதுபதிக்கு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலிவுட் திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது என்பதும் இந்தப் படத்தை ’அந்தாதூன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபாஸின் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'சலார். பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி வரும்

சிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்!

சிம்பு நடித்த 'ஒஸ்தி' தனுஷ் நடித்த 'மயக்கமென்ன' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத் என்பதும், இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் ரிலீஸானது

பிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி எந்தவித இமேஜூம் இல்லாமல் எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பார் என்பதும் அந்த வேடத்தில் தனது தனி முத்திரையைப் பதித்து வருகிறார்

பல ஆண்டுகால பிரச்சனையை ஒருசில மணி நேரங்களில் தீர்த்து வைத்த நடிகர் சோனுசூட்! வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் வில்லன் கேரக்டர்களில் நடித்தவர் பிரபல நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கின்போது மக்கள் மனதில் ஹீரோவாக மாறினார்

விஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ள 'காடன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது