பயமுறுத்தும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ்… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

கொரோனா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS-Cov-2 வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா வரிசையில் 15 ஆவதாக ஒமைக்ரான் கண்டறியப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும் இதன் மரபணு 50 க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் அதன் ஸ்பைக் புரதம் அதிக வீரியம் கொண்டதாகவும் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றை தாக்கி அழிக்கும் ஒரே ஆயுதமாக தற்போது கொரோனா தடுப்பூசி விளங்கி வருகிறது. இந்த தடுப்பூசியின் செயல்திறனை கிட்டத்தட்ட 40% அளவிற்கு குறைத்துவிடும் தன்மையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இதுவரை தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸின் பாதிப்பை தடுப்பதற்கு பல்வேறு நாடுகள் தற்போது பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தை ரத்துத் செய்திருக்கின்றன.

முன்னதாக ஒமைக்ரான் பாதிப்பட்ட நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு டெல்டா வகை வைரஸ் உறுதிச்செய்யப்பட்டது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற நோக்கில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பின் தீவிரம் சற்று தணிந்த நிலையில் தற்போது பொதுமக்களிடையே தனிநபர் இடைவெளி குறித்த விழிப்புணர்வு குறைந்துபோய் உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு உலகம் முழுவதும் தலைத்தூக்கியதை அடுத்து பல அரசுகள் மீண்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

மேலும் ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் அதிக வீரியம் கொண்டிருப்பதால் மனிதர்களை அதிவேகத்தில் தாக்கும் என்றும் இது மனித செல்களுக்குள் மிக விரைவாகச் சென்று நோய்த்தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் மனித சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் செயல் தலைவர் மரியா வான் கெர்கோ தெரிவித்து உள்ளார்.

More News

'ஆர்.ஆர்.ஆர்' டிரைலர் தேதியை அறிவித்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகள்: சிம்புவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

சிம்பு நடித்த 'மாநாடு'  திரைப்படம்' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த நபர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி… நடந்தது என்ன?

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் இறந்தவர் ஒருவர் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பிரசவத்திற்காக சைக்கிளில் சென்ற அமைச்சர்… கவனம் ஈர்த்த சம்பவம்!

சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட நியூசிலாந்து நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் பிரசவ வலியுடன் தன்னுடைய சைக்கிளில் மருத்துவமனைக்குச்

உங்க ரெண்டு பேரு மேல எனக்கு டவுட்: நிரூப், ப்ரியங்காவிடம் ஆவேசமாக மோதும் அண்ணாச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி தலைவர் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய தலைவர் பதவியை நிரூப் தன்னிடம் இருக்கும் காயின் மூலம் பறித்துக் கொண்டார் என்பதும்