ஆன்லைன் வகுப்பால் தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில்… அதிலேயே உலகச் சாதனை படைத்த நம்ம ஊரு பொண்ணு!!!

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

 

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கிறது. இந்த அனுபவம் ஆரம்பக் கட்டத்தில் உற்சாகமாகத்தை ஏற்படுத்தினாலும் போகப்போக ஒருவித சலிப்புத் தட்டும் உணர்வு தோன்றுவதாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு குறித்த பிரச்சனைகளால் சில தற்கொலைகள்கூட நடைபெற்றன. இதனால் ஆன்லைன் வகுப்புகளையே ரத்து செய்யுமாறும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நிலைமை இப்படி இருக்கும் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வெறுமனே 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து அதில் உலகச் சாதனையே படைத்து இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சி அடுத்த எலமக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆரத்தி ரகுநாத். இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யுஜி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கொரோனா காரணமாக தொடங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பிய இவர் கோர்ஸ் எரா எனும் திட்டத்தின் மூலம் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், டென்மார்க் பல்கலைக் கழகம், வெர்ஜீனியா பல்கலைக் கழகம், நியூயார்க் மாகாணப் பல்கலைக் கழகம், ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்கள் வழங்கிய வகுப்புகளில் தற்போது தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

ஒரே நேரத்தில் இத்தனை வகுப்புகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது அந்தப் படிப்புகளை உற்சாகமாகக் கற்றுக்கொண்ட ஆரத்திக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது அனுபவத்தை உலகச் சாதனையாக அங்கீகரித்து சர்வதேச சாதனை மன்றம் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளது.

More News

ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானிசங்கர் காதலுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா!

நேற்று திடீரென சமூக வலைதளங்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு

21 வருடங்களுக்கு முன் இதே நாள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள் 

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 பெரிய ஏரிகள்!!! இதனால் அங்கு உயிரினம் வாழமுடியுமா???

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

கடந்த 1992ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட

'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்! 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுகுறித்த புரமோக்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.