உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது!!!

  • IndiaGlitz, [Tuesday,March 31 2020]

 

கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சரியாக 3 மாதக் கடைசியில் உலகம் முழுவதும் 8 லட்சம் மக்களை பாதித்து இருக்கிறது. மேலும், 38,749 பேர் இந்நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. WHO கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா வைரஸ் பற்றிய செய்தியை உறுதிசெய்தது. சரியாக 3 மாதத்தில் உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் பீதியில் வைத்திருக்கிறது.

தற்போது கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. 11,591 பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். ஆனால் நோய்த்தொற்றில் அமெரிக்கா தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் 164,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3173 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தப்படியான ஸ்பெயின் 94,417 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் 8189 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பட்டியலில் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனாவின் பாதிப்புக்கு அதிகவிலைக் கொடுத்த சீனாவில் தற்போது நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏற்படும் நோய்த்தொற்று குறைந்து மக்கள் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். எனவே சீனா கொரோனா நோய்த்தொற்றில் 4 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அடுத்தப்படியாக ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ், ஐக்கிய அரசுநாடுகள் எனத் தற்போது ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தனது உச்சப்பட்சமான தாக்குதலைக் காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 40 ஆவது இடத்தில் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் இருக்கிறது.

More News

மது கொரோனாவுக்கு நல்லதா???

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது

சமூக இடைவெளி நிரந்தரமாகிவிடுமோ? பிரபல இயக்குனரின் அச்சம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில்

தமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தொழிலாளர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அன்றாட தொழிலாளி முதல் மாத வருமானம் உள்ளவர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன.