close
Choose your channels

'தலைவர் 168'ல் இணைந்த பிரபல எழுத்தாளர்!

Monday, February 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது அதே இடத்தில் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஆகிய நான்கு முக்கிய நடிகைகள் நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல குணசித்திர நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தற்போது இணைந்துள்ளார். இந்த தகவலை அவருடைய பேரன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளதோடு ரஜினிகாந்த் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். வேல ராமமூர்த்தி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்தில் வேலராமமூர்த்தி நடிப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்[சொ அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos