close
Choose your channels

'வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல் கேரக்டர் இதுதான்: ஜெயமோகன் தகவல்!

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ’வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் ஆடியோ விழாவில் ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கமல்ஹாசனிடம் அந்த கதையை தருவோம் என்றும் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் எழுத்தாளர் ஜெயமோகன் வேட்டையாடு விளையாடு 2’ படத்தில் கமல்ஹாசனின் கேரக்டர் குறித்து தகவலை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இந்த படத்தின் கதைப்படி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில் காவல்துறை அவரை மீண்டும் ஒரு வழக்கில் ஈடுபட கோரிக்கை விடுப்பதாகவும், அந்த கோரிக்கையை ஏற்று அவர் ஒரு முக்கிய வழக்கை விசாரணை செய்வதுதான் படத்தின் ஒன்லைன் கதை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தில் கமலஹாசன் ஓய்வுபெற்ற போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் முதல் பாகத்தில் கமல் ஜோடியாக ஜோதிகா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.