close
Choose your channels

"Patient Zero" கொரோனாவால் பாதித்த முதல் நோயாளி இவர்தான்!!!

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால் உறுதிச்செய்யப்பட்டது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி கூடம் ஒன்றில் இந்த வைரஸ் முதலில் பரவியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது எங்கிருந்து பரவியது என்பது தொடர்பான ஆய்வுகள் முற்றுபெறவில்லை.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவிய முதல் நபர் இவர்தான் என்று அமெரிக்காவின் Wall street பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதி வுஹான் மாகாண உணவு சந்தையில் இறால் இறைச்சி விற்பனை செய்து வந்த 57 வயதான Wei Guixian கடுமையான காய்ச்சல், சளி பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. சிகிச்சை எடுத்துக்கொண்டபோதிலும் அவருக்கு சரியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அடுத்த நாள் வுஹாண் மாகாணத்திலுள்ள 11 ஆவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடுமையான சோம்பல் உணர்வு மற்றும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். Wei Guixian அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் வுஹாண் இறைச்சி கூடத்திலும் இதே போல 27 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

டிசம்பர் கடைசி வாரத்தில் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் Wei Guixian முழுவதும் தனிமைப்படுத்தப் பட்டார். இதை சீன செய்தி நிறுவனமான Mirror உறுதி செய்திருக்கிறது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் தான் கொரோனா வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தனக்கு பரவிய நோய்த்தொற்றை பற்றி Wei Guixian, இறைச்சி விற்பனைகூடத்தில் இருந்த கழிப்பறையை பயன்படுத்திய பின்பே இந்த நோய்த்தொற்று தனக்கு வந்ததாகக் கூறியுள்ளார். முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா அறிகுறி உள்ள 27 நபர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அரசாங்கம் விரைந்து செயல்பட்டிருந்தால் இந்நோய் தொற்றை தடுத்து இருக்கலாம் என்று வீய் கூறியுள்ளார். ஆனால் கொரோனா பாதித்த முதல் நபர் இவர் இல்லை என இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் டிசம்பர் 1 ஆம் தேதியே கொரோனா நோய்த்தொற்று பாதித்த ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது. அல்மைசர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1 ஆம் தேதி சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்றும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது என்றும் அந்த மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஒரு புதிய வகை வைரஸ் தோன்றி அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரை "Patient Zero" என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. தற்போது Wei Guixian கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்று ஊடகங்கள் அறிவித்து வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.