பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டிகள் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடநது வரும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால் நேற்றைய போட்டி விறுவிறுப்புடன் காணப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கவுர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 53 ரன்களும், நிடா டார் 52 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 134 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை. மிதாலி ராஜ் 56 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மந்தனா 26 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியால் இந்திய மகளிர் அணி இரண்டு வெற்றிகள் 4 புள்ளிகளுடன் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

More News

சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, புயலாக மாறி அதற்கு கஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகினர் பலருக்கு அரசியல் ஆசை வந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும்,

சம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்

நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நடிகர் நடிகைகள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று நடிகர் சங்கம் அறிக்கை

விஜய் வெட்டிய வெற்றி விழா கேக்கில் மிக்ஸி-கிரைண்டர்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

சென்னையை நோக்கி வருகிறது 'கஜா' புயல்

வங்கக்கடலில் உருவாகி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் புயலுக்கு 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.