யாக்கை, முப்பரிமாணம் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் 'குற்றம் 23' படத்தின் வசூல் நம்பர் ஒன்னாக இருந்தது குறித்து சற்றுமுன்னர் பார்த்தோம். அந்த வகையில் தற்போது கடந்த வாரம் வெளியான கிருஷ்ணாவின் 'யாக்கை' மற்றும் சாந்தனுவின் 'முப்பரிமாணம்' படங்களின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.

கிருஷ்ணா, சுவாதி ரெட்டி நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன 'யாக்கை' திரைப்படம் சென்னையில் 16 திரையரங்க வளாகங்களில் 86 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,25,810 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 75% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படம் சராசரி வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சாந்தனுவின் 'முப்பரிமாணம்' திரைப்படம் சென்னையில் 16 திரையரங்க வளாகங்களில் 74 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.9,71,840 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுசித்ரா லீக் விவகாரம் குறித்து தனுஷ் சகோதரி கூறியது என்ன?

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டில் ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் அதிகமாக பேசப்பட்டு வருபவர் நடிகர் தனுஷூம் ஒருவர். இந்த பிரச்சனை குறித்து தனுஷ் தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில் தனுஷின் சகோதரி விமலா கீதா, பாடகி சுசித்ரĬ

மீண்டும் களை கட்டிய பாட்ஷா. புதுப்படங்களை மிஞ்சிய ஓப்பனிங் வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அவருடைய மிகச்சிறந்த படம் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடும் படம் 'பாட்ஷா' என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது...

அருண்விஜய்யின் 'குற்றம் 23' சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும், அந்தந்த வார இறுதி சென்னை பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் குறித்து பார்த்து வருகிறோம்...

பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் இளையதளபதி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கதையின் ஒருபகுதி கடந்த 80களில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தம்பதிக்கு பிறந்த நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்...