யஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் விஷால், கார்த்தி பட இயக்குனர்.. விரைவில் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல கன்னட நடிகர் யஷ் நடிக்கும் திரைப்படத்தை விஷால், கார்த்தி படங்களை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல கன்னட நடிகர் யஷ், ‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ படங்கள் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர். இவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு, அவர் பிரபல இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’இரும்புத்திரை’, கார்த்தி நடித்த ’சர்தார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது ’சர்தார் 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் யஷ் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments