close
Choose your channels

மனைவிக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த 'கேஜிஎஃப்' யாஷ்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் தனது மனைவி ராதிகா பண்டிட் அவர்களுக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

யாஷ் நடித்த ‘கேஜிஎஃப்2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, 1000 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் யாஷ் உள்பட படக்குழுவினர் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தின் அதே பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தை யாஷ் மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் யாஷ் தனது மனைவி ராதிகாவுக்கு ஆசை ஆசையாய் முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்பட பல புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘கேஜிஎஃப் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.