close
Choose your channels

கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் தெரியும், அதுக்காக இப்படியா? யாஷிகா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போடுவது என்பது ஃபேஷனாக மாறி வருவது என்பது தெரிந்ததே. ஆங்காங்கே முழங்கால் அல்லது முழங்காலுக்கு கீழே மட்டும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போட்டு வந்த இளம் பெண்கள் தற்போது முழங்காலுக்கு மேலும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போட்டு கிளாமரில் கலக்கிய வருகின்றனர்

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் கிளாமரின் உச்சத்திற்கே சென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் அவர் அணிந்திருக்கும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் இதுவரை அவர் அணிந்த உடைகளிலேயே கிளாமரின் உச்சமாக உள்ளது. இந்த உடையுடன் அவர் கொடுத்துள்ள சில வித்தியாசமான போஸ்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வீடியோவுக்கு ’கிழிந்த ஜீன்ஸ் போடுவார்கள் தெரியும், அதுக்காக இப்படியா? என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் தற்போது பதிவாகி வருகிறது. இந்த வீடியோவையும் யாஷிகாவின் காஸ்ட்யூமையும் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது, கமெண்ட்ஸில் பதிவு செய்யுங்கள்,


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.