close
Choose your channels

'நீ அந்த வீடியோவை அனுப்பு, நான் இந்த வீடியோவை அனுப்புறேன்: யாஷிகாவின் நெத்தியடி பதில்!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகாவிடம் வீடியோ அனுப்ப சொன்ன நெட்டிசன் ஒருவரிடம், ‘நீ அந்த வீடியோவை அனுப்பினால், நான் நீ கேட்ட வீடியோவை அனுப்புகிறேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார் என்பதும், யாஷிகா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார் என்பதும் தெரிந்ததே.

பல்வேறு அறுவை சிகிச்சைக்கு பின் குணமாகி தற்போது தான் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் யாஷிகா. இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா பதிவு செய்த ஒரு புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த நெட்டிசன், ‘விபத்து வீடியோவை அனுப்புகிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, ‘நீ பிறந்த வீடியோவை அனுப்பு, நான் நீ கேட்ட விபத்து வீடியோவை அனுப்புறேன்’ என்று யாஷிகா பதிலடி கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த பதிலடிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.