close
Choose your channels

நயன்தாரா பாடலுக்கு சேலையில் கிளாமர் காட்டிய யாஷிகா: வைரல் வீடியோ

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்றின் பாடலுக்கு நடிகை யாஷிகா சேலையில் உச்சகட்ட கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் இடம்பெற்ற ’நான் பிழை’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் அனிருத் இசையில் உருவான இந்த மெலடி பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடிகை யாஷிகா கருப்பு காஸ்ட்யூமில் உச்சகட்ட கிளாமருடன் கூடிய போஸ்களை கொடுத்துள்ளார். இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, தற்போது குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் பிஸியாக போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.