close
Choose your channels

எங்களை சாவடிக்காதே! யாஷிகா வீடியோவை பார்த்து வெறுப்பான நெட்டிசன்கள்

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுக்கு டைட்டிலை பெறும் தகுதி இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு அவர் அளித்த கண்மூடித்தனமாக ஆதரவால் மக்களால் வெறுக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவ்வப்போது கேமிரா முன் நின்று மொக்க ஜோக் சொல்வதை போல் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொக்க ஜோக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் 'என் செல்போன் கீழே போட்டும் உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு' என்று ஒரு மொக்கை ஜோக்கை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவுக்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக 'இந்த மாதிரி மொக்க ஜோக் சொல்லி எங்களை சாவடிக்காதே' என்று வெறுப்புடன் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.