ஆர்யாவின் 'யட்சன்' பட டிராக்லிஸ்ட்

  • IndiaGlitz, [Sunday,August 02 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் புரட்சி தளபதி விஷால் நடித்த 'பாயும் புலி' ஆகிய இரு படங்களின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில் நாளை ஆர்யா-கிருஷ்ணா நடித்த 'யட்சன்' படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் தேசியவிருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவே இந்த படத்தின் மூன்று பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் விபரங்களை பார்ப்போம்.

1. பர பர' என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் ஜேசுதாஸ் மற்றும் ரஞ்சித் பாடியுள்ளனர். இரண்டுமே ஆண்குரலாக இருப்பதாக இந்த பாடல் ஆர்யா-கிருஷ்ணா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. 'கொஞ்சலை' என்று தொடங்கும் அடுத்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் தான்வி ஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

3. 'காகபொண்ணு' என்று தொடங்கும் இந்த பாடலை ஆண்டனிதாசன், பிரியதர்ஷினி மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

4. 'இன்னும் என்ன' என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா தனித்து பாடியுள்ளார்.

5. 'சாம்பியன்' என்று தொடங்கும் இந்த பாடலை ராபிட் மேக், ஷீஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

More News

'புலி' படத்தின் விஜய்-ஹன்சிகா காதல் பாடல்

விஜய் நடித்த 'புலி' படத்தின் அறிமுகப்பாடலின் வரிகளை நேற்று கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை பார்த்தோம்....

'புலி' படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் அறிமுகப்பாடல் வரிகள்

இளையதளபதி நடிக்கும் படங்களில் அவருடைய அறிமுகப்பாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு படத்திலும் அவர் அறிமுகப்பாடலில்...

'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் டைட்டில்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'பாயும் புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரீலீஸாகவுள்ள நிலையில், விஷால் தற்போது 'பசங்க'...

'பாயும் புலி' ஆடியோ விழாவிற்கு வரவேண்டாம். ஆர்யாவுக்கு விஷால் வேண்டுகோள்?

பூஜை, ஆம்பள வெற்றி படங்களை அடுத்து விஷால் நடித்து முடித்துள்ள 'பாயும் புலி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது...

சீனா, ஜப்பானில் விஜய்யின் 'புலி' ரிலீஸ்?

இந்திய சினிமா வரலாற்றில் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே சீன மற்றும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது....