தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் குளம்போல தேங்கியிருப்பதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால் தண்ணீர் வெளியே முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.