close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’பூமி’ மற்றும்’ ஜனகனமன’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

‘பூமி’ படத்தை இயக்குனர் லட்சுமண் அவர்களும், ’ஜனகனமன’ படத்தை இயக்குனர் அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர். 2 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் ’பூமி’ படத்திற்கு கமர்ஷியல் ஹிட் படங்களில் இசையமைத்து வரும் டி இமான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று குறித்த மாஸ் அப்டேட்டை இமான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘பூமி’ படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி அவர்கள் ஒரு பாடலை பாடி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பாடகர் யோகி பி ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ படத்தில் படம் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் டி.இமான் தெரிவித்துள்ளார். 

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் இந்த படம் உருவாகி வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz