close
Choose your channels

நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த யோகிபாபு: எந்த படத்தில் தெரியுமா?

Monday, April 19, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அஜித்தின் ‘வலிமை’ உள்பட சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நட்புக்காக ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

’தனி ஒருவன்’ ’தில்லுக்குதுட்டு’ உள்பட பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபிகிருஷ்ணா என்பவரின் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’நாயே பேயே’. சக்திவாசன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் யோகிபாபுவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சித்தனர். ஆனால் யோகிபாபு ஏற்கனவே பல படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் இந்த படத்தின் ஒரு விளம்பர பாடலுக்கு மட்டும் நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்றும் நட்புக்காக அவர் நடித்து கொடுத்துள்ளார் என்றும் படக்குழுவினர் நெகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்

இந்த விளம்பரப் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு மிகப்பெரிய அளவில் இந்த பாடல் உதவியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர், ‘நாயே பேயே’ திரைப்படம் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz