close
Choose your channels

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு

Friday, May 29, 2020 • தமிழ் Comments

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் யோகி பாபு முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார்

ரோஜா, தளபதி, உயிரே, துப்பாக்கி, செக்க சிவந்த வானம், தர்பார் உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இவர் மலையாளத்தில் ’ஜாக் அண்ட் ஜில்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாகவும் மஞ்சு வாரியர் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடி கேரக்டர் ஒன்றில் சௌபின் சாகிர் என்பவர் நடித்துள்ளார் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த நிலையில் இந்தப் படம் தமிழிலும் உருவாகியுள்ளது. ’சென்டி மீட்டர்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் செளபின் சாகிர் நடித்த காமெடி வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தபின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz