close
Choose your channels

யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜண்ட் சரவணன்!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அது மட்டுமின்றி அவரது பிறந்தநாளில் அவரது மகனின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியையும் அவரது வீட்டில் நடத்தினார் என்பதையும் அது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் அஜித், விஜய் படங்கள் உள்பட பல பிரபலங்கள் நடிக்கும் படங்களில் நடித்து வரும் யோகிபாபு லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் நாயகனாகவும் ஊர்வசி ரெளட்டாலா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் யோகிபாபு கலந்து கொண்டார். அப்போது அவரது பிறந்தநாளை லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினர் பிரமாதமாக கொண்டாடி யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். யோகி பாபு படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் அவருக்கு லெஜண்ட் சரவணன் உள்பட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.