நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சினிமா தொழிலாளர்கள் முற்றிலும் வேலை இன்றி, பசியும் பட்டினியும் உள்ளனர். இதனை அடுத்து சினிமா தொழிலாளர்களான பெப்சி அமைப்பின் உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்கள் பலரும் லட்சக்கணக்கில் நிதிஉதவி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சில நடிகர்களும் வருமானம் இன்றி இருப்பதால் அவர்களுக்கும் ஒருசில முன்னணி நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்காக 1250 கிலோ அரிசி கொடுத்து உதவி செய்துள்ளார்

நடிகர் சங்கத்தில் உள்ள நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் வறுமையில் வாடி இருப்பதை அறிந்து இந்த உதவியை யோகிபாபு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நடிகர்களும் நடிகர் சங்க உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது???

கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினிப் பொருட்களைவிட சோப்புகள் அதிக திறனுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது

ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம்? 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 738 பேராக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது

கொரோனா தாக்கத்தால் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம்!!! ILO தலைமை இயக்குநர்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் 200 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்படக்கூடும்

கொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட