யோகி பாபு ஹீரோவாக நடித்த இன்னொரு படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல காமெடி நடிகர் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது அவர் ’ஜோரா கைதட்டுங்க’ என்ற படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகி பாபு மற்றும் சாந்தி ராவ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்த ’ஜோரா கைதட்டுங்கள்’ என்ற படத்தை வினேஷ் மில்லியனின் என்பவர் இயக்கி உள்ளார்.
அருணகிரி இசையில், மது அம்பாட் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது இந்த படம் மே 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com