யோகிபாபுவின் 'தர்மபிரபு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 24 2019]

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முதல்முறையாக முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'தர்மபிரபு

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்படி இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துகுமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.