close
Choose your channels

யோகிபாபுவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்த 'தர்ம பிரபு' 'கூர்கா' ஆகிய திரைப்படங்கள் வெளி வந்த நிலையில் அவர் தற்போது இன்னும் ஒரு சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்றின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'ட்ரிப்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கியுள்ளார். யோகிபாபு உடன் கருணாகரன், சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய் பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரக்நாத் படத்தொகுப்பில் சித்து குமார் இசையில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு டேஞ்சர் மணி என்பவர் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

'ட்ரிப்' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் இருந்து இந்த படம் ஆக்சன் த்ரில் படம் என தெரியவருகிறது. யோகிபாபுவின் முதல் ஆக்சன் படமாக இந்த படம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்டு பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.