பாக்கத்தான போற இந்த கோஹ்லியோட ஆட்டத்த... : 'பேய்மாமா' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ’பேய்மாமா’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டிரைலரின் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது என்ற காமெடி வசனங்களுடன் ஆரம்பித்து டிரைலர் முழுவதும் காமெடி காட்சிகள் கொட்டி கிடப்பதை பார்க்கும்போது சரியான காமெடி விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது தெரிய வருகிறது.

தமன்னாவை திருமணம் செய்துவிட்டு மும்பையில் செட்டிலாக போறேன் என்ற வசனமாகட்டும், குறிவைக்க வேண்டியது நெஞ்சை அல்ல என்ற பாகுபலி பாணி வசனமும், நான் டம்மி பீஸுதான், காமெடி பீஸூதான் ஹீரோவே கிடையாது என்ற வசனமும், எனக்கு பேய் பிடித்துள்ளது என்று யோகிபாபு கூற அதற்கு அவரது அம்மா, ‘பேய்க்காவது உன்னை பிடிச்சிருக்கே’ என்ற வசனமும் காமெடியின் உச்சத்தில் உள்ளது.

மேலும் ரஜினியின் சந்திரமுகி மற்றும் அரசியல், விஜய்யின் ‘பிகில்’ என்று யோகிபாபு அனைவரையும் கிண்டல் செய்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவின் கேரக்டர் பெயர் கோஹ்லி என்பதும், ’பாக்கதான போறிங்க இந்த கோஹ்லியோட ஆட்டத்த’ என்ற வசனமும் இன்றைய நிலையில் மிகப் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் இன்று கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, முக்கிய ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளது என்பதும், கோஹ்லியின் ஆட்டத்தை ரசிக்க அவரது ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.