அந்த கிரீடத்தை அடிச்சிடோம்னா, பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்: 'தூக்குதுரை' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,June 10 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படங்களில் ஒன்று ‘தூக்குதுரை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பழமையான கிராமத்தில் இருக்கும் கோயில் ஒன்றில் உள்ள கிரீடத்தை திருடுவதற்காக யோகி பாபு தலைமையிலான கூட்டம் ஒன்று கிராமத்திற்குள் வருகிறது. இந்த கூட்டம் கிரீடத்தை திருடும் முன் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கிரீடத்திற்கு ஆசைப்படுவது, யோகிபாபுவுக்கு திடீரென காதல் தோன்றுவது ஆகிய காட்சிகள் படத்தில் உள்ளன. மொத்தத்தில் கிரீடம் திருடப்பட்டதா? என்பதை காமெடியாக கூறியிருக்கும் கதை தான் ‘தூக்குதுரை’ திரைப்படம் என்பது இந்த டீசரிலிருந்து தெரியவருகிறது.

யோகி பாபு, இனியா, மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியன், சென்ராயன், பாலசரவணன், நமோ நாராயணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே எஸ் மனோஜ் இசையில் உருவாக்கிய இந்த படம் யோகி பாபுவுக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்… காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மனைவி!

திருமணமாகி ஓராண்டுகளைக் கடந்த பின்பும் தனது கணவன் உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார், விவாகரத்துக்கு முயற்சித்தாலும் அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்

நடிகை - அமைச்சர் ரோஜாவுக்கு என்ன ஆச்சு? சென்னை அப்பலோவில் அனுமதி..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவரும் தற்போது ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருப்பவருமான ரோஜா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'வாடிவாசலுக்கு முன் ஒரு சூர்யா படம்.. இயக்குனர் யாராக இருக்கும்?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து

உலக அழகிப்போட்டி இந்தியாவிலா? 27 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கவுரவம்!

பெண்ணின் ஆற்றலையும் தனித்துவத்தையும் கொண்டாடும் வகையில் உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.