close
Choose your channels

'தளபதி 63' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர் சமீபத்தில் இணைந்த செய்தியை பார்த்தோம். தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

விஜய் நடித்த 'வேலாயுதம்', 'மெர்சல்' மற்றும் சர்கார் ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்த பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீண்டும் விஜய்யுடன் 'தளபதி 63' படத்தில் இணைகின்றார். இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு, ரோபோசங்கரின் மகள் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கி இவ்வருட தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.