close
Choose your channels

யோகிபாபு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒருசில படங்களில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று ’காக்டெயில்’. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4 திருமணமான நபர்கள் ஒரு காட்டுக்குள் சுற்றுலா சென்று அங்கு ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

சாய்பாஸ்கர் இசையில் உருவாகியுள்ள இந்த இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்து வருகிறார். இந்த படம் யோகிபாபுவின் வெற்றி படங்களில் ஒன்றாக இணையும் என்றும் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.