இந்த தீபாவளி வேற மாதிரி இருக்கும்! 'தளபதி 63' குறித்து யோகிபாபு

  • IndiaGlitz, [Friday,March 01 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை தீபாவளி அன்று திரையிட படக்குழுவினர் மும்முரமாக பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கின்றார் என்பது தெரிந்ததே. ஆனால் தெரியாத ஒரு விஷயம் இந்த படத்தில் யோகிபாபு கிட்டத்தட்ட விஜய்யுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறாராம்

ஏற்கனவே 'மெர்சல்', 'சர்கார்' என விஜய்யின் படங்களில் அடுத்தடுத்த நடித்துள்ள யோகிபாபு, 'தளபதி 63' படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து பேட்டி ஒன்றில், ''தெறி' படத்தில் என்னை நடிக்க வைக்க அட்லி முயற்சித்தார். ஆனால் அந்த படம் மிஸ் ஆகிவிட்டதாகவும், 'இந்த படத்தில் உங்களுக்கு படம் முழுவதும் விஜய்யுடன் டிராவல் செய்யும் கேரக்டர் என்று அட்லி தன்னிடம் கூறியதாகவும் யோகிபாபு கூறியுள்ளார். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் ஜாலியாக இருக்கும் என்றும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த தீபாவளி வேற மாதிரி இருக்கும்' என்றும் யோகிபாபு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More News

கருப்பு வெள்ளையில் நயன்தாராவின் அடுத்த படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இரு வேடங்களில் நடித்துள்ள 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது

மறுபடியும் என்னால் 'அன்பே சிவம்' போல் ரிஸ்க் எடுக்க முடியாது: சுந்தர் சி

என்னிடம் ரசிகர்கள் ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் காமெடி படத்தைத்தான் எதிர்பார்க்கின்றனர். கருத்து கூறும் வகையில் 'அன்பே சிவம்' போன்ற படங்களை இனி என்னால் இயக்க முடியாது.

அபிநந்தனை வரவேற்க எல்லையில் குவிந்த பொதுமக்கள்: திருவிழா கோலத்தில் வாகா!

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை விடுவிக்க நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டார்.

எல்.கே.ஜி வெற்றிக்கு பின் புரமோஷன் போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது

எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்

ழம்பெரும் நடிகை சீதாலட்சுமி. கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.