close
Choose your channels

சதீஷ், பவித்ராவுக்கு நடராஜன் பதிவிட்ட டுவீட்!

Thursday, April 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து யார்க்கர் கிங் நடராஜன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நாயகனாக சதீஷ் நடிக்க உள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க உள்ளார் என்பதையும் நேற்று பார்த்தோம். இந்த படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஹீரோவாகி உள்ள சதீஷ்க்கு ஏற்கனவே திரையுலகினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் கிங் நடராஜனும் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சதீஷ் அண்ணா உங்களுடைய புதிய படத்திற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று அவர் வாழ்த்து தெரிவித்து இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும் நடராஜனின் வாழ்த்துக்கும் வழக்கம்போல் ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

ஏற்கனவே சதீஷுடன் ‘பிரெண்ட்ஸ்’ நடித்த ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டரில் சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.