close
Choose your channels

நீங்கள் லாட்டரியில்கூட வெல்லலாம்… ஆனால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது…பீதியை கிளப்பும் WHO!!!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் லாட்டரியில்கூட வெல்லலாம்… ஆனால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது…பீதியை கிளப்பும் WHO!!!

 

உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அதிர்ச்சி ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நீங்கள் லாட்டரியில்கூட ஜெயித்து விடலாம் கொரோனாவிடம் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மைக் ரியான், தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய்ப்பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60-70% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் உலக மக்கள் தொகையில் 200 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுவரை உலகில் 3 கோடி பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 9 லட்சம் மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். கடந்த ஜனவரியில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு தற்போது வரை கட்டுப்படுத்த முடியாத நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் துரித வேகத்தில் நடைபெற்று வந்தாலும் இதுவரை எந்த தடுப்பூசி ஆய்வுகளும் முடிவான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது பதட்டத்தை வரவழைக்கிறது.

இந்நிலையில் உலகின் நம்பிக்கையான கொரோனா தடுப்பூசியாகக் கருதப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பூசிக்கான சோதனை கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. காரணம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இம்மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பரிசோதனைகள் தொடரப்பட்டு இருக்கின்றன.

மேலும், உலகின் முக்கியமான இன்னொரு கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 இருந்து வருகிறது. ஆனாலும் இத்தடுப்பூசி பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியுலகில் சமர்பிக்க படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இம்மருந்து 14% மக்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இப்படியான நெருக்கடி சூழலில் தற்போது உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் உலகில் உள்ள 200 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. கொரோனா தடுப்பூசியை நாம் விரைவில் கண்டுபிடித்து பயன்படுத்தா விட்டால் நிலைமை மோசமாகிவிடும் எனவும் எச்சரித்து இருக்கிறார். இதனால் மேலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.