20 வருஷத்துல நீங்க தான் பெஸ்ட்: சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Friday,July 01 2022]

நடிகர் மாதவனுடன் சிம்ரன் நடித்த ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் மாதவனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கே பாலச்சந்தர் இயக்கிய ’பார்த்தாலே பரவசம்’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ’கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய திரைப்படங்களில் மாதவனுடன் நடித்த சிம்ரன் தற்போது ’ராக்கெட்டரி’ படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறிய போது ’பார்த்தாலே பரவசம்’ படத்தில் மாதவனுடன் நடித்த சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மாதவனுடன் நடித்த இந்திரா கேரக்டரை அடுத்து தற்போது ’ராக்கெட்டரி’ படத்தில் நடித்த மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் இந்த 20 வருடங்களில் மாதவன் கொஞ்சம்கூட மாறவில்லை என்றும் அவர் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்களுடன் திரையுலகை பகிர்ந்து கொண்டதோடு நீங்கள் இயக்கும் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: ஹாட்ரிக் வெற்றி உறுதியா?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதியும்,  சிம்பு நடித்த இன்னொரு திரைப்படமான 'மஹா' திரைப்படம் ஜூலை 22ம் தேதியும் ரிலீஸ்

சந்தானம் அடுத்த படத்தின் செம அப்டேட்: வைரல் புகைப்படங்கள்!

சந்தானம் நடித்து வரும் முக்கிய திரைப்படத்தின் செம அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

லைகாவின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த அடுத்த திரைப்படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் 'யூ' கிடைத்துள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி

அவங்களே ஹீரோயின் மாதிரி அழகா தான் இருக்காங்க: இளம் நடிகையின் அம்மா புகைப்படம் வைரல்!

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்த இளம் நடிகையின் அம்மாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த நடிகையின் அம்மாவே ஹீரோயின் மாதிரி

'விக்ரம்' ஓடிடி ரிலீஸில் திடீர் திருப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 400 கோடி ரூபாய்க்கும்