இனிமேல் பழைய நகைகளை விற்க முடியாதா..? மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளுக்கு ஹால்மார்க் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஹால்மார்க் செய்யப்படாத பழைய நகைகளை மாற்றவோ விற்பனை செய்யவோ முடியாது என்றும் மத்திய அரசு புதிதாக நிபந்தனை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்தது என்பதும் இதையடுத்து அனைத்து நகைக்கடைக்காரர்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை தான் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக வாங்கும் நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் கட்டாயம் என பெரும்பாலான பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி பழைய நகைகளை விற்பதற்கு, பழைய நகைகளை வேறு வடிவில் மாற்றுவதற்கும் ஹால்மார்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஹால்மார்க் இல்லாத பழைய தங்க நகைகள் வைத்திருக்கும் நபர்கள் அதை விற்பதற்கு முன்பு அல்லது புதிதாக வடிவமைப்பதற்கு முன்பு ஹால்மார்க் கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நகைகளை ஹால்மார்க் செய்வதற்கு BIS பதிவு செய்யப்பட்ட நகை கடைக்காரரிடம் இருந்து பெறலாம் என்றும் ஹால்மார்க் பெறுவதற்கு ஒவ்வொரு நகைக்கு, 45 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நகைகள் வைத்திருப்பவர்கள் எந்த தங்க நகை விற்பனையாளரிடம் சென்று தங்களது பழைய நகைகளை கொடுத்து ஹால்மார்க் முத்திரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய நகைகளில் பழைய ஹால்மார்க் இருந்தாலும் அந்த ஆபரணங்கள் செல்லுபடியாகும் என்றும் புதிய ஹால்மார்க் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை நீங்கள் வெறுமனே பயன்படுத்துவதாக மட்டுமே இருந்தால் ஹால்மார்க் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதை விற்க வேண்டும் அல்லது அதை உருக்கி வேறு விதமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

​​​​​​​முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த பிரபல இயக்குனர்.. விளக்கமாக பதிலளித்த விக்ரம்..!

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விக்ரம் மீது முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் அதற்கு நடிகர் விக்ரம் விளக்கமாக தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். 

நிஜ வாழ்வில் ஜோடி சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. திருமண வீடியோ வைரல்..!

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தால் பொருளாதார ரீதியாக கார், வீடு வாங்கி செட்டில் ஆவது மட்டுமின்றி வாழ்க்கை துணையும் செட்டில் ஆகிவிடும் என்பதை பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதை

சரத்பாபு குறித்து கமல்ஹாசன் ட்விட்.. இருவரும் சேர்ந்த நடித்த படங்கள் என்னென்ன தெரியுமா?

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் சரத்பாபு இன்று காலமானார் என்ற செய்தி தமிழ் தெலுங்கு திரை உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்

'விடுதலை'க்கு பின் சூரியின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட் தந்த படக்குழு..!

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜீ5 ஓடிடியில் வெளியானது

400 வாட்ஸ் பல்ப் போல மின்னுறாங்களே… தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் இளம் நடிகை