close
Choose your channels

சினிமாவை விட Youtubeகாரன் கரெக்டா  Payment தர்றான்.. பிக்பாஸ் நடிகை

Tuesday, April 22, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாவில் வாய்ப்பு தேடி நேரத்தை வீணாக்குவதை விட, யூடியூப்பில் நமது திறமையை வெளிப்படுத்தினால், YouTubeகாரன் கரெக்டாக Payment தருகிறான் என்று பிக் பாஸ் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து பின்வருமாறு:

சினிமாவில் நாம் சாதிக்க வேண்டும் என்றால் லக் தேவையில்லை. அதற்கு பதிலாக நிறைய சினிமாவுக்கு பின்னால் நடிக்க வேண்டும், கூஜா தூக்க வேண்டும், அநியாயத்துக்கு சொம்பு தூக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.

சினிமாவில் வாய்ப்பு கேட்க வேண்டும் என்றால், ஒரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் இடம்தான் நாம் வாய்ப்பு கேட்க வேண்டும். ஆனால் அந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் சரியாக நடந்து கொள்கிறார்களா என்பது சந்தேகமே.

சினிமாவில் நாம் வாய்ப்பு தேடி நேரத்தை வீணாக்குவதை விட, யூடியூப் என்ற பிளாட்பார்ம் தற்போது இருக்கிறது. அதை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால், YouTubeகாரன் சரியாக, கரெக்டாக Payment கொடுக்கிறான். சினிமாவில் வாய்ப்பு தேடி ஏமாந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்."

என்னை மாதிரி, நடிகர் ஸ்ரீ மாதிரி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் YouTube பிளாட்பார்மை பயன்படுத்தி முன்னேறுங்கள்.. உங்கள் தன்மானத்தை விட்டு சினிமா பின்னால் போக வேண்டாம்’ என்றும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment