close
Choose your channels

பெயரை மாற்றி ரீ எண்ட்ரி ஆகியுள்ள பி.வாசு மகன்

Wednesday, July 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, சந்திரமுகி, விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய பி.வாசு, தன்னுடைய மகன் சக்தியை 'தொட்டால் பூ மலரும்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்திற்கு பின்னர் சக்தி, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்', நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தாலும், குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் இவருக்கு வேறு படங்கள் அமையவில்லை. இந்நிலையில் தற்போது 'தகராறு' என்ற படத்தில் நடித்து வருகிறார்..


இந்த படத்தில் தன்னுடைய பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றியுள்ள சக்தியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிக்கின்றார். ஒரு உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் திரைக்கதை, எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு கொலை, சமூகத்தை எந்த அளவுக்கு பாதிக்கின்றது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்.பி.ரவி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் நடைபெற்று வருகிறது.

பெயரை மாற்றி ரீ எண்ட்ரி ஆகியுள்ள பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் படங்களை இயக்கி கொடுத்த பி.வாசுவின் மகன் சக்திக்கு இந்த படம் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.