ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப துணிந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு காரணமாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர் என்பது குறித்த பல செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இணையத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் தான் ஆடைமாற்றும் வீடியோவை நேரலையில் ஒளிபரப்ப முயற்சி செய்தார். இதற்காக அவர் கேமராவை கிளிக் செய்துவிட்டு அவர் தான் அணிந்த உடை மாற்றுவதற்காக முயற்சித்தார்.

அப்போது அவர் இரண்டு ஸ்டெப் பின்னால் சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு வாளியில் தலைகுப்புற விழுந்தார். அதன்பின் அவர் சிரித்துக் கொண்டே எழுந்து வந்து அந்த வீடியோவை வெளியிடும் முயற்சியை கைவிடுவதாக கூறியுள்ளார். இந்த நகைச்சுவை வீடியோவைப் பார்த்து பலரும் சிரித்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.