close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் அடுத்த படத்தில் இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தற்போது ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலே ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் சில படங்களை அவரது உதவி இயக்குனர்கள் இயக்கி வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவரான பொன்குமார் இயக்கும் திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்கவுள்ளர். இந்த படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் நாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான ’ரங்கூன்’ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்து இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவரது தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.