டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,April 16 2019]

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களில் சம்சத் என்ற வாலிபர் நேற்று வேலை முடிந்தவுடன் கட்டிடத்தின் 3வது மாடியில் தனது மொபைல்போனில் டிக்டாக் வீடியோவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது.

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்சத்தை, உடன் பணிபுரிபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர் அவரை சோதனை செய்து ஏற்கனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறியதால் அனைவரும் சோகமடைந்தனர். இதன்பின்னர் சம்சத்தின் உடல் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணி முடியாத கட்டிடத்தில் டிக் டாக் வீடியோவை பார்த்து கொண்டே அங்குமிங்கும் அவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News

கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது

சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தது.

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி

நேற்று உலகக்கோப்பை கி்ரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் ஜடேஜா.

 மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி.

காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது